
ஜோகூர் பாரு, செப்டம்பர்-19 – ஜோகூர் பாருவில் 3 உடம்புபிடி மற்றும் உடல் புத்துணர்ச்சி மையங்களில் குடிநுழைவுத் துறை மேற்கொண்ட அதிரடிச் சோதனைகளில், பல்வேறு குற்றங்களுக்காக 54 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைதாகினர்.
அவர்களில் பெரும்பாலோர் தாய்லாந்து மற்றும் சீன நாட்டு பெண்கள் ஆவர்.
அனைவருமே முறையான ஆவணங்கள் இன்றி உடம்புபிடி ஊழியர்களாக வேலை செய்து வந்துள்ளது கண்டறியப்பட்டது.
அம்மூன்று மையங்களின் பாதுகாவலர்களாக செயல்பட்டு வந்த 3 உள்ளூர் ஆடவர்களும் பிடிபட்டனர்.
உடம்புபிடி, உடல் புத்துணர்ச்சி சேவையோடு, sauna எனப்படும் நீராவிக் குளியல் சேவையும் 300 ரிங்கிட் பேக்கேஜில் அங்கு வழங்கப்படுகிறது.
உடம்பிடி சேவைக்கு 92 முதல் 180 ரிங்கிட் வரையில் கட்டணம் விதிக்கப்படுகிறது.
கைதானவர்கள், மேல் விசாரணைக்காக Setia Tropika குடிநுழைவுத் தடுப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டனர்.