
பாயான் லெப்பாஸ் – ஜூலை-20 – “மக்கள் பணத்தைக் கொள்ளையடிக்காத போது நான் ஏன் பதவி விலக வேண்டும்?” என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேள்வி எழுப்பியுள்ளார்.
‘Turun Anwar’ என்ற சுலோகத்துடன் தமக்கெதிராக எதிர்கட்சியினர் புறப்பட்டிருப்பது குறித்து அவர் அவ்வாறு கருத்துரைத்தார்.
“இனப் பாகுபாடு இன்றி அனைத்து மலேசியர்களுக்கும் பிரதமராக நான் பணியாற்றி வருகிறேன்; எனவே என்னைப் பதவி விலகுமாறு கூச்சலிடுவோருக்கு ஏமாற்றம் தான் மிஞ்சப் போகிறது” என்றார் அவர்.
எதிர்கட்சிகளுக்குப் போதிய எண்ணிக்கை இருந்தால் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரட்டும்; அதில் தோற்றால் நானே விலகி விடுவேன்; இல்லையென்றால் பொதுத் தேர்தல் வரை காத்திருங்கள்” என பிரதமர் அறிவுறுத்தினார்.
பினாங்கு, பாயான் லெப்பாஸில் தெலுக் கும்பார் (Teluk Kumbar) மடானி வளாகத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் உரையாற்றிய போது அன்வார் அவ்வாறு சொன்னார். அன்வாரை பதவி விலக வற்புறுத்தி ஜூலை 26-ஆம் தேதி கோலாலம்பூரில் மாபெரும் அமைதிப் பேரணிக்கு எதிர்கட்சிகள் ஏற்பாடு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.