
கோலாலம்பூர், டிசம்பர்-9 – மலேசிய அரசாங்கத்தின் கடன் மதிப்பீடு Fitch Ratings நிறுவனத்தால் நிலையான முன்னேற்றத்துடன் BBB+ என்ற அந்தஸ்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
இது சிறந்த நிர்வாகம், அரசியல் நிலைத்தன்மை மற்றும் நிறுவனத் தரத்தை பிரதிபலிப்பதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வாண்டு GDP எனப்படும் உள்நாட்டு மொத்த உற்பத்தி 4.6% வளர்ச்சியைப் பதிவுச் செய்யுமென்றும் Fitch கணித்துள்ளது.
வேலைவாய்ப்பு அதிகரிப்பு, ஊதிய உயர்வு மற்றும் AI தொடர்பான முதலீடுகள் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன.
பொது நிதி மற்றும் நிதி பொறுப்புக் கடமைச் சட்டம், அரசாங்கக் கொள்முதல் சட்டம் போன்ற சீர்திருத்தங்கள் வெளிப்படைத்தன்மையை வலுப்படுத்துகின்றன.
இந்நிலையில், 2025-ல் நிதி பற்றாக்குறை GDP-யில் 3.8% ஆகவும், 2026ல் 3.5% ஆகவும் குறையும்; 2028-க்குள் 3% இலக்கை அடையும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சு நம்பிக்கைத் தெரிவித்தது.
உலக சவால்களை எதிர்கொள்ள மடானி பொருளாதாரத் திட்டத்தில் அரசாங்கப் உறுதியாக உள்ளதாகவும் MOF கூறிற்று.



