“பகடிவதையை தடுப்போம்!” – சுங்கை வாங்கி தோட்டத் தமிழ்ப்பள்ளியின் மலாய் மொழியில் விழிப்புணர்வுப் பாடலை வெளியிட்டு

சித்தியவான், டிசம்பர் 23-மாணவர்களிடையே பகடிவதை சம்பவங்களை தடுக்கும் நோக்கில் பேராக், சித்தியவான் சுங்கை வாங்கி தோட்டத் தமிழ்ப்பள்ளியில், “Bebas Buli Jiwa Merdeka” என்ற கருப்பொருளில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

சிறப்பம்சமாக, மலேசிய தமிழ்ப்பள்ளிகளில் முதல் முறையாக, இப்பள்ளி பகடிவதை எதிர்ப்பு முயற்சியாக மலாய் மொழியில் விழிப்புணர்வுப் பாடலை வெளியிட்டுள்ளது.
பாடல் வரிகளை ஆசிரியர் கணேசன் சண்முகம் எழுதியுள்ளார்; இசை Suno AI மூலம் ஆசிரியர் கோபிநாத் கோவிந்தசாமி மெருகூட்டியுள்ளார்.

காணொளியுடன் வெளியிடப்பட்ட இந்த பாடல், மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது.
விழாவில் கல்வி அமைச்சரின் சிறப்பு அதிகாரி தியாகராஜ் சங்கரநாராயணன், மஞ்சோங் மாவட்ட இணைக் கல்வி அதிகாரி மற்றும் பல முக்கிய விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.
“Cinta Diri Henti Buli” என்ற சுலோகம் கொண்ட _badge-ஜும் மாணவர்களுக்கும் விருந்தினர்களுக்கும் வழங்கப்பட்டது.



