Latestமலேசியா

காட்டில் நீர் வீழ்ச்சி பகுதியில் ஆடவர் சடலம் கண்டுப்பிடிப்பு

பாலிங் , ஆகஸ்ட் 14 – பாலிங் கம்போங் Teluk Sanau காட்டுப் பகுதியிலுள்ள நீர் வீழ்ச்சிப் பகுதியில் ஆடவர் ஒருவர் இறந்து கிடந்த நிலையில் கண்டுப்பிடிக்கப்பட்டார். நீர் வீழ்ச்சிப் பகுதியில் காணாமல்போனவரை கண்டுப்பிடிக்க தேடும் மற்றும் மீட்பு நடவடிக்கைக்கு உதவும்படி போலீசிடம் அதிகாலை மணி 2.34 க்கு அவசர அழைப்பை பெற்றதாக பாலிங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவர் சுல்கைரி மாட் தஞ்சில் ( Zulkhairi Mat Tanjil ) தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பாலிங் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையைச் சேர்ந்த பணியாளர்கள் குழு சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் நடந்துச் சென்று 9 மீட்டருக்கும் அதிகமான உயரமான பகுதியில் சுயநினைவற்ற நிலையில் இருந்த அந்த ஆடவரின் உடலைக் கண்டனர்.

தீயணைப்பு வீரர்களின் மீட்பு நடவடிக்கையில் பங்கேற்ற சுகாதார அமைச்சின் பணியாளர்கள் அந்த ஆடவர் இறந்துவிட்டதை உறுதிப்படுத்தினர். கயிறு மற்றும் ஸ்டிரேச்சரை பயன்படுத்தி இறந்த ஆடவரின் உடலை மீட்கும் முயற்சியில் தீயணைப்பு பணியாளர்கள் ஈடுபட்டனர்.

எனினும் செங்குத்தான தன்மை, வழுக்கும் பாறை மேற்பரப்பு, நிலப்பரப்பின் சீரற்ற அமைப்பு, மழை மற்றும் இருள் காரணமாக அந்த ஆடரின் உடலை மீட்கும் பணி மிகவும் சிக்கலாக இருந்தது. கிட்டத்தட்ட இரண்டு மணி நேர போராட்டத்திற்குப் பின் அந்த நபரின் உடலை கீழே இறக்க போலீஸ் மற்றும் சுகாதார அமைச்சு மற்றும் பொதுமக்களின் உதவியும் கிடைத்தது. இறந்தவரின் உடல் பின்னர் போலீசிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது அடையாளம் குறித்த எந்த ஆவணமும் கிடைக்கவில்லையென Zulkhairi  கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!