
பாசிர் மாஸ், கிளந்தான், செப்டம்பர் 10 – முன்னாள் இராணுவ வீரர்கள் இருவர், கடந்த மாதம் ஜெலி பத்து மெலிந்தாங் பகுதியிலுள்ள பள்ளி ஒன்றின் கூட்டுறவு அறை மற்றும் ஆசிரியர் அறையயை உடைத்து நுழைந்து, 25 ரிங்கிட்டை திருடிய வழக்கில் இன்று அவர்கள் நீதிமன்றத்தில் தங்களின் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
இந்நிலையில் தண்டனைக்கான தீர்ப்பை வரும் செப்டம்பர் 21 ஆம் தேதி நீதிமன்றம் அறிவிக்க முடிவு செய்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி அதிகாலையில் குற்றவாளிகள் பள்ளிக்குள் புகுந்து, ஆசிரியர் அறையும் கூட்டுறவு அறையும் உடைத்து, அங்கிருந்த RM25 பணத்தை திருடியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அபராதமும் மற்றும் பிரம்படியும் விதிக்கப்படுமென்று அறியப்படுகின்றது.