
பினாங்கு, ஜனவரி 28 – தைப்பூசத்தை முன்னிட்டு, பினாங்கு இந்து அறப்பணி வாரியம் மற்றும் தண்ணீர்மலை பாலதண்டாயுதபாணி ஆலயமும் இணைந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி ஒன்றினை நடத்தின.
இதில் பிரபல ஆன்மீகவாதி டாக்டர் பாண்டிதுரை அவர்கள், தைப்பூசத்தின் ஆன்மிக தத்துவங்கள், சடங்குகள் மற்றும் பாரம்பரியங்களை விளக்கும் பேருரையை நிகழ்த்தினார்.
தமிழ்க்கடவுளான முருகப்பெருமானுக்குப் பக்தர்கள் செலுத்தும் நேர்த்திகடன்களான காவடி எடுப்பது, செடில் குத்துவது, மற்றும் தேங்காய் உடைப்பது போன்ற சடங்குகள் குறித்து அவர் விளக்கமளித்தார்.
தெய்வீக அர்ப்பணிப்பும் தன்னிலை தூய்மைப்படுத்தலின் அடையாளமே காவடி எடுப்பது என குறிப்பிட்டார் அவர்.
தைப்பூசம் என்பது சடங்குகளை மட்டும் குறிக்கும் நிகழ்ச்சியாக இல்லாமல், அது மனிதனின் ஆன்மிக பயணமும், தன்னிலை அறியும் வழியுமாகும் என டாக்டர் பாண்டிதுரையின் உரை, அனைவருக்கும் வலியுறுத்தியது.
இந்த நிகழ்ச்சி, பக்தர்களுக்கு தைப்பூசத்தை ஆழமாகப் புரிந்து கொள்ளும் வாய்ப்பை வழங்கியது.