Latestமலேசியா

பினாங்கு தாமான் ரத்னா தீ சம்பவத்தில் மகன் சந்தேகப் பேர்வழியா?

ஜோர்ஜ் டவுன், டிச 24 – பட்டர்வெர்த், Taman Rathna வில் டிசம்பர் 10 ஆம்தேதி ஒரு பெண்ணும் அவரது வளர்ப்பு மகளும் மரணம் அடைந்த தீ விபத்து தொடர்பில் அப்பெண்ணின் மகன் காரணமாக இருக்கக்கூடும் என விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளதாக பினாங்கு போலீஸ் தலைவர் டத்தோ அஸிஸி இஸ்மாயில் ( Azisee Ismail ) தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பான விசாரணை ஆவணங்கள் இறுதிவடிவம் கண்டுள்ளதால் இது விரைவில் அரசாங்க துணை வழக்கறிஞரின் அலுவலகத்திற்கு மேல் நடவடிக்கைக்காக அனுப்பிவைக்கப்படும் என அவர் கூறினார். இப்போதைக்கு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

சந்தேக நபர் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், அவரது செயலுக்கான உண்மையான நோக்கம் தெரியவில்லை. இருப்பினும், போலீஸ் மேற்கொண்ட விசாரணையில் குற்றவியல் கூறுகள் இருப்பதாக Azisee நம்பிக்கைத் தெரிவித்தார். தீக்குள்ளான வீட்டில் பெட்ரோல் தடயங்களையும் தீயணைப்பு துறையினர் கண்டுப்பிடித்துள்ளனர்.

50 வயதுடைய ஹயானி யாக்கோப் மற்றும் அவரது ஐந்து வயது வளர்ப்பு மகள் ஆண்ட்ரா ஆகியோர் தீயில் கருகி இறந்ததாக தெரிவிக்கப்பட்டது. அவர்களின் கருகிய உடல்கள் பிரதான கதவின் அருகே காணப்பட்டன.

ஹயானி யாக்கோப்பின் 20 வயதுடைய மகன், கூரை இடிந்து விழுந்ததில் நசுங்கி காயமடைந்தார். தீ விபத்து தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக அந்த இளைஞனை போலீசார் கைது செய்துள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!