
கோலாலம்பூர், ஆக 15 – வடக்கு – தெற்கு நெடுஞ்சாலையில் 283.80 ஆவது கிலோமீட்டரில் Bandar Baru Nilai டோல் சாவடியில் PLUS மலேசிய Berhad சாலை சீரமைப்பு பணியை மேற்கொள்ளவிருக்கிறது.
இதனால், நாளை சனிக்கிழமை இரவு 10 மணி முதல் அந்த சாலை மூடப்படும். ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் அந்த சீரமைப்பு பணிகள் முழுமையடைந்து நிலைமை வழக்கத்திற்கு திரும்பும்.
இதனை முன்னிட்டு Bandar Baru Nilai டோல் சாவடிக்கு நுழையும் சாலையில் கனரக வாகனங்களுக்கான ஒரு தடம் தற்காலிமாக மூடப்படும்.
எனவே சாலை பயனர்கள் தங்கள் பயணம் தொடர்பில் முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.