
ஜாசின், டிசம்பர் 24-மலாக்கா சுங்கை ரம்பாயில் வயலில் விளையாடிய போது பிறப்புறுப்பில் அட்டைக் கடித்ததாக நம்பப்படும் 7 வயது சிறுமி, இரத்தக் கசிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள்.
ஞாயிறு பிற்பகல் வாக்கில் அங்கு நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியின் போது அச்சம்பவம் நிகழ்ந்தது.
வலியாலும் இரத்தக் கசிவாலும் துடித்த மகளை, உடனடியாக தாயார் மருத்துவமனக்குக் கொண்டுசென்றார்.
பரிசோதனையில், சிறுமியின் பிறப்புறுப்பில் வெளியே எந்தவொரு காயமும் கண்டறியப்படவில்லை.
சம்பவத்தின் போது, வயல்வெளியில் மகள் உள்ளாடை அணியாமல் அரைக்கால் சட்டை மட்டுமே அணிந்திருந்ததாக தாய் கூறினார்.
சிறுமி பாலியல் தொல்லைக்கு ஆளாகவில்லை என்பதும் மருத்துவப் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டது.



