
புக்கிட் மெர்தாஜாம், செப்டம்பர் 9 – பினாங்கு புக்கிட் மெர்தாஜாம் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் தனது முகத்தில் தோன்றிய சிறிய முகப்பருவைக் கைகளால் அழுத்தி எடுத்ததால், அவரின் கன்னப் பகுதி கடுமையாக வீங்கியுள்ளது.
உதட்டின் கீழ்புறத்தில் தோன்றிய முகப்பரு ஆரம்பத்தில் சாதாரணமாக தோன்றினாலும், அதனை அழுத்திய சில நாட்களில் அப்பகுதியில் திடீரென வீக்கமும் தாங்க முடியாத வலியும் ஏற்பட்டு சாப்பிடுவதற்கும் பேசுவதற்கும் கூட சிரமமாக இருந்ததென்று அப்பெண் வலைத்தளத்தில் பதிவிட்டார்.
தாங்க முடியாத வலியால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் பின்பு சிகிச்சையின் போது கத்தி கதறியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தச் சம்பவம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட பின், பலர் முகப்பருவை அழுத்துவதின் அபாயங்களைப் பற்றி எச்சரிக்கை கருத்துக்களை வெளியிட்ட வண்ணமாக உள்ளனர்.