
புதுடில்லி, டிச 11 – இந்தியாவில் புதுடில்லியிலுள்ள நெடுஞ்சாலை ஒன்றின் ஓய்வு பெறும் இடத்தில் ஒரு தம்பதியர் சமையல் செய்யும் காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலானதைத் தொடர்ந்து நெட்டிசன்களில் பலர் அவர்களின் நடவடிக்கையை கடுமையாக சாடி கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.
அவர்களது செயல் போக்குவரத்திற்கு தொல்லை ஏற்படுத்தும் என்பதோடு நாகரீகமாக இல்லையென பலர் தெரிவித்தனர்.
அதே வேளையில் சம்பந்தப்பட்ட இந்த தம்பதியர் தங்களின் செயலை தற்காத்து பேசியுள்ளனர்.
நெடுஞ்சாலையில் வாகன ஓட்டுனர்கள் ஓய்வு பெறுவதற்கு அனுமதிக்கப்பட்ட இடத்தில் எங்கள் நடவடிக்கைக்கு அனுமதி இருக்கிறது என அவர்கள் வாதிட்டனர்.
வைரலான அந்த வீடியோ கிளிப்பில் ஆடவர் ஒருவர் தனது மகனுடன் ஓய்வு எடுத்து வருவதையும் அவரது மனைவி பரபரப்பாக உணவு சமைப்பதையும் காணமுடிகிறது.
பொது இடத்தை தங்களது விருப்பம்போல் பயன்படுத்தும் அந்த தம்பதியரை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்ததோடு சாலையோரத்தில் சமைக்கும் அவர்களது செயல் விவேகமாற்றது என சாடினர்.
மற்ற நாடுகளில் இருப்பதைப்போல் நெடுஞ்சாலைகளில் ஓய்வு பெறும் இடம் வெகு தொலைவில் அமைக்க வேண்டும் என்றும் பலர் இந்திய அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்தனர்.



