Latestமலேசியா

போலி ஆவணம் தொடர்பில் FIFA விதித்த அபராதம்: தொழில்நுட்ப பிழையை ஒப்புக்கொண்ட FAM

பெட்டாலிங் ஜெயா, செப்டம்பர்-29,

போலி ஆவணங்களைச் சமர்ப்பித்ததாகக் கூறி அனைத்துலகக் கால்பந்து சம்மேளனமான FIFA-வால் அபராதம் விதிக்கப்பட்டுள்ள மலேசிய கால்பந்து சங்கம் – FAM, 7 கலப்பு மரபின (naturalised players) வீரர்களுக்கான ஆவணங்களில் “தொழில்நுட்ப பிழை” ஏற்பட்டதை தற்போது ஒப்புக்கொண்டுள்ளது.

அப்பிழை FAM பணியாளர்களால் ஏற்பட்டு விட்டது, ஆனால் வீரர்கள் அனைவரும் உண்மையிலேயே மலேசியர்கள் தான் என, அதன் பொதுச் செயலாளர் நூர் அஸ்மான் ரஹ்மான் கூறினார்.

FIFA, முன்னதாக FAM-முக்கு சுமார் 19 லட்சம் ரிங்கிட் அபராதம் விதித்ததோடு, அந்த ஏழு வீரர்களுக்கு 12 மாத தடையுடன் தனித்தனியாக அபராதமும் விதித்தது.

ஆவணங்கள் தொடர்பாக போலியான மற்றும் தவறான தகவல்களை FAM வழங்கியதாக FIFA ஒழுங்கு நடவடிக்கைக் தீர்ப்பளித்தது.

அந்த 7 வீரர்களும் கடந்த ஜூன் மாதம் வியட்நாமுக்கு எதிராக நடைபெற்ற 2027 ஆசியக் கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டியில் விளையாடியிருந்தனர்.

எழுத்துப்பூர்வ தீர்ப்பை FIFA வெளியிட்ட பின், மேல் முறையீடு செய்வோம் என FAM தெரிவித்திருந்த நிலையில், தற்போது தொழில்நுட்பப் பிழை இருந்ததை அது ஒப்புக் கொண்டுள்ளது.

FAM-முக்கு விதிக்கப்பட்ட அபராதம் மலேசியக் கால்பந்து துறைக்கு பெரும் பின்னடைவு என கால்ந்து விமர்சகர்கள் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!