
மஞ்சோங், டிசம்பர்-1 – பேராக், மஞ்சோங், கம்போங் கோ பகுதியில் 78 வயது முதியவர் ஒருவர் மண்வெட்டியால் அடித்து படுகொலை செய்யப்பட்டார்.
நேற்று மதியம் 12 மணியளவில் குடும்பத்தார் அவ்வாடவரின் உடலை வீட்டின் வரவேற்பறையில் இரத்த வெள்ளத்தில் கண்டு அதிர்ந்துபோயினர்.
தலை மற்றும் முகத்தில் கடுமையான காயங்கள் இருந்தன.
கொலைக்குப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் மண்வெட்டி இரத்தக் கறையுடன் சம்பவ இடத்தில் போலீஸாரால் கைப்பற்றப்பட்டது.
உடற்கூறு பரிசோதனை ஈப்போவில் உள்ள ராஜா பெர்மாய்சூரி பைனூன் மருத்துவமனையில் நடத்தப்பட்டது.
அதில், தலைப்பகுதியில் ஏற்பட்ட கூர்மையான மற்றும் கூர்மையற்ற காயங்களே மரணத்திற்கு காரணம் என உறுதிச் செய்யப்பட்டது.
இச்சம்பவம் குற்றவியல் சட்டம் பிரிவு 302 கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் கொலையாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படும்.



