
ஜாசின், மலாக்கா டிசம்பர் 29 – நேற்றிரவு அலோர் காஜா–மலாக்கா தெங்கா–ஜாசின் (AMJ) நெடுஞ்சாலையில், மாடு ஒன்று சாலையைக் கடக்க முயன்ற போது, திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த 25 வயது இளைஞர் ஒருவர் அதனை மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்தின் போது, வேறொரு மோட்டாரில் பயணித்த உயிரிழந்த இளைஞரின் நண்பருக்கு, காயங்கள் ஏற்பட்டு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
அந்த இரு நண்பர்களும் இரவு சுமார் 11 மணியளவில் தனித்தனி மோட்டார் சைக்கிள்களில் மெர்லிமாவிலிருந்து ஜாசினை நோக்கி பயணித்து கொண்டிருந்த போது, திடீரென சாலையின் குறுக்கே வந்த மாட்டை தவிர்க்க முடியாமல் அதனை மோதினர் என்று ஜாசின் மாவட்ட காவல் துறை தலைவர் Superintendan Lee Robert குறிப்பிட்டார்.
அச்சூழலில் காயமடைந்த ஆடவர் மேல் சிகிச்சைக்காக, மலாக்கா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்த சம்பவத்தை போலீசார் சாலை போக்குவரத்து சட்டத்தின் கீழ் பதிவு செய்து மேல் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.



