Latestமலேசியா

மின்னல்fm-ன் பிந்தாங் மின்னல் பாடல் போட்டியில் RM10,000 பரிசுடன் வெற்றிக் கிண்ணத்தை வென்றார் அபிஷேகப்பிரியன்

கோலாலம்பூர், செப் 9 – இவ்வாண்டு நடைபெற்ற மின்னல்fm-ன் ‘’BINTANG MINNAL” பாடல் திறன் போட்டியில் தலைநகரைச் சேர்ந்த 18 வயதான அபிஷேகப்பிரியன் (ABISHEKAPPRIYAN) 10,000 ரிங்கிட் ரொக்கத்தையும், வெற்றிக் கிண்ணத்தோடு, சான்றிழையும் கைப்பற்றி 2025ஆம் ஆண்டு பிந்தாங் மின்னலின் மாபெரும் வெற்றியாளராக வாகைசூடியுள்ளார்.

இரண்டாவது இடத்தை உன்னிதேவன் பாஸ்கரன் ( UNNITHEIVAN BHASKARAN ) வென்ற நிலையில், அவருக்கு 7,000 ரிங்கிட் ரொக்கத்தோடு , வெற்றிக் கிண்ணமும், சான்றிதழும் வழங்கப்பட்டது.

 

இவ்வாண்டு முதல் முறையாக நெகிரி செம்பிலான், பினாங்கு, பேராக், பஹாங் மற்றும் சிலாங்கூர் ந்ன 5 மாநிலங்களில் நடத்தப்பட்ட குரல் தேர்வில் அதிகமான இளைஞர்கள் ஆர்வமாக கலந்துகொண்டிருந்தனர்.

அதே சமயத்தில் நேரடியாய் வந்து குரல் தேர்வில் கலந்து கொள்ள வாய்ப்பில்லாதவர்களுக்கு, சமூக வலைத்தளம் வாயிலாக குரல் தேர்வில் கலந்துக் கொள்ளவும் மின்னல்fm வாய்ப்பு வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மிகத் தரமான நீதிபதிகளைக் கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட 10 வெற்றியாளர்களில் ,6 போட்டியாளர்கள் ஆகஸ்ட்டு 2ஆம் நாள் நடைபெற்ற அரை இறுதி சுற்றிலிருந்து இறுதி சுற்றுக்கு முன்னேறினார்கள்.

இதனிடையே, கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி சனிக்கிழமை, ANGSKAPURI AUDITORIUM SERI ANGKASAவில் பிரமாண்டமான முறையில் நடைபெற்ற இறுதிச் சுற்று ரசிகர்களின் பலத்த ஆதரவோடு நடைபெற்றது.

இந்நிலையில் இப்போட்டியின் மூன்றாம் நிலை பரிசை THESYALAN Sean Pillai வென்றதோடு 5,000 ரிங்கிட் ரொக்கத்தோடும் வெற்றிக் கிண்ணத்தையும் சான்றிதழையும் தட்டிச் சென்றார் .

நீதிபதிகளின் சிறப்பு விருதைப் பெற்ற நவீனா புகழேந்தி 3,000 ரிங்கிட் ரொக்கத்தையும், வெற்றிக் கிண்ணத்தையும்,சான்றிதழையும் பெற்றார் . இப்போட்டியில் Aaron Thomas & Kanmani Kanesan ஆகியோர் ஆறுதல் பரிசை பெற்றனர்.

மின்னல்fm-ன் ‘’BINTANG MINNAL” பாடல் திறன் போட்டி, உண்மையிலேயே உள்ளூர் இளைஞர்களின் இசைத்திறனை வெளிக்கொணர ஒரு அற்புதமான மேடையை ஏற்படுத்தி தருகிறது என்றால் அது மிகையாகாது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!