Latestமலேசியா

மேபேங்கின் DuitNow சேவையில் தற்காலிக மந்தம்

கோலாலம்பூர், டிசம்பர்-24 – மேபேங்க், வங்கியின் DuitNow சேவைகள் தற்காலிகமாக மந்தமடைந்துள்ளன.

இதில் QR கட்டணம், பணப் பரிமாற்றம் மற்றும் bill கட்டணம் செலுத்துதல் ஆகியவை அடங்கும்.

பரிவர்த்தனைகள் வழக்கத்தை விட அதிக நேரம் எடுக்கலாம் அல்லது தற்காலிகமாக கிடைக்காமல் இருக்கலாம்.

எனவே, வாடிக்கையாளர்கள், தற்போதைக்கு Interbank GIRO சேவையை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சேவையை விரைவில் மீட்டெடுக்க தனது தொழில்நுட்ப குழு பணியாற்றி வருவதாக மேபேங்க் உறுதியளித்துள்ளது.

உதவித் தேவைப்படுவோர், 1-300-88-6688 என்ற எண்ணை அழைக்கலாம் அல்லது mgcc@maybank.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!