
ஷா அலாம் , நவ 16 – ம.இ.காவில் நீண்ட காலம் சேவையாற்றிய நான்கு மூத்த தலைவர்களுக்கு ம.இ.கா பொதுப் பேரவையில் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
ம.இ.காவை தோற்றுவித்த ம.இ.காவின் முதல் தலைவர் ஜோன் தீவியின் (John Thivi) பெயரில் சிறந்த சேவையாளருக்கான விருது டான்ஸ்ரீ குமரன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
சிறந்த தலைமைத்துவத்திற்கான துன் V.T சம்பந்தன் விருது பேராசிரியர் டாக்டர் T.மாரிமுத்து அவர்களுக்கும், உருமாற்றத்திற்கான டான்ஸ்ரீ வி. மாணிக்கவாசம் விருது ஜோகூர் மாநில ம.இ.காவின் முன்ளாள் தலைவர் டத்தோ KS பாலகிருஷ்ணனுக்கும் வழங்கப்பட்டது.
இந்த விருதளிப்பின் உச்சக் கட்ட விருதாக துன் சாமிவேலு வாழ்நாள் சாதனையாளர் விருது சிலாங்கூரின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ M.செல்லத்தேவன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
இவர்கள் அனைவருக்கும் ம.இ.காவின் தேசிய தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் மற்றும் தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் ஆகியோர் பொன்னாடை மற்றும் மாலை அணிவித்து விருதுகளை வழங்கி சிறப்பித்தனர்.
இதனிடையே ம.இ.காவில் நேரடி உறுப்பியம் இணையும் திட்டம் இந்த பொதுப் பேரவையில் அதிகாரபூர்வமாக தொடங்கப்பட்டது.
இதற்கான அகப்பக்கத்தை ம.இ.காவின் தேசிய தலைவைர் டான்ஸ்ரீ SA விக்னேஸ்வரன் மற்றும் ம.இ.காவின் துணை தலைவைர் டத்தோஸ்ரீ M.சரவணன் தொடக்கி வைத்தனர்.
இதன்வழி ம.இ.காவில் இனி உறுப்பினர்களாக இணைய விரும்புவோர் அகப்பக்கத்தின் மூலம் இணைந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.



