
லாபுவான், நவம்பர்-23 – லாபுவானில் உள்ள ஒரு கார் பட்டறையில் கைவிடப்பட்ட காருக்குள் 8 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளான்.
இந்த அதிர்ச்சி சம்பவம் கம்போங் முஸ்லீம் தொழிற்சாலை பகுதியில் நேற்று காலை நிகழ்ந்தது.
ஜூன் மாதம் முதல் பட்டறையில் கைவிடப்பட்டிருந்த காரை ஒரு மெக்கானிக் நகர்த்த முயன்றபோது துர்நாற்றம் வீசியதால் அவர் சந்தேகமடைந்தார்.
உள்ளே பார்த்தபோது சிறுவனின் அழுகிய உடலைக் கண்டு அவர் அதிர்ந்துபோய் போலீஸுக்கு தகவல் கொடுத்தார்.
சடலம் சவப்பரிசோதனைக்காக லாபுவான் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
தற்போதைக்கு அச்சிறுவன் பாஜாவ் சமூகத்தைச் சேர்ந்தவன் என்பது மட்டுமே தெரிய வந்துள்ளது; மற்றபடி அடையாள ஆவணங்கள் எதுவும் இல்லை.
சம்பவ இடத்தில் CCTV கேமராவில் பதிவான காட்சிகள் ஆய்வு செய்யப்படுகின்றன; இதுவரை குற்றச்செயல் அம்சங்கள் எதுவும் இல்லை என்றும் போலீஸ் கூறியது.



