Latestஇந்தியாஉலகம்மலேசியா

கள்ள உறவில் இந்தியாவிலேயே முதலிடம் வகிக்கும் தமிழகத்தின் காஞ்சிபுரம்

சென்னை – ஜூலை-25 – திருமணத்தைத் தாண்டிய கள்ள உறவில், தமிழகத்தின் காஞ்சிபுரமே இந்தியாவில் முதலிடத்தை வகிக்கிறது.

புது டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு போன்ற பெரிய நகரங்களை எல்லாம் காஞ்சிபுரம் இதில் பின்னுக்குத் தள்ளியிருப்பது, Ashley Madison எனப்படும் dating செயலி வெளியிட்ட அதிர்ச்சி தகவலில் தெரிய வருகிறது.

திருமணத்தைத் தாண்டிய கள்ள உறவுகளைத் தேட எத்தனைப் பேர் இந்தச் செயலியைப் பயன்படுத்துகின்றனர், அவர்கள் எந்த வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள், அவர்களின் செயல்பாடுகள் என்ன என்பது போன்ற அம்சங்களைத் தாங்கி இந்தத் தரவு வெளியாகியுள்ளது.

அவ்வகையில் கடந்தாண்டு 17-ஆவது இடத்திலிருந்த காஞ்சிபுரம் இவ்வாண்டு அதிரடியாக முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டாமிடத்திலிருந்து ஆறாமிடம் வரை டெல்லியின் பல்வேறு பகுதிகள் பிடித்துள்ளன.

முக்கிய நகரமான மும்பை, இப்பட்டியலில் முதல் 20 இடங்களில் கூட வரவில்லை என்பது இன்னோர் ஆச்சரியமாகும்.

முதல் தர நகரங்களை விட, வளர்ச்சிக் குறைந்த இரண்டாம் மூன்றாம் தர நகரங்களிலேயே இந்த dating செயலி பயன்பாடு அதிகமிருப்பதும் இதன் வழி தெரிய வந்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!