Latestமலேசியா

“வானில் ஸ்டேடியமா?”மறுக்கும் சவுதி அரேபியா: வைரலான படங்களனைத்தும், AIஇன் கைவண்ணமே!

சவுதி அரேபியா, அக்டோபர் 30 –

2034 ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்காக சவுதி அரேபியா (Arab Saudi) வானளாவிய கட்டிடத்தின் மேல் ‘ஸ்டேடியம்’ ஒன்றை அமைக்கவுள்ளது என்ற தகவல் முற்றிலும் பொய்யானது என்று அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

சமீபத்தில் சமூக ஊடகங்களில் பரவி, மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்று வைரலான, “NEOM Sky Stadium” எனும் காணொளி, செயற்கை நுண்ணறிவால் (AI) உருவாக்கப்பட்டது என்றும் இது நிஜத் திட்டமல்ல என்றும் விளக்கமளிக்கப்பட்டது.

சவுதி அரேபியா தற்போது உருவாக்கும் ஸ்டேடியம் பாலைவனப் பகுதியில் அமைந்த மலைச்சரிவில், கடல் மட்டத்திலிருந்து சுமார் 350 மீட்டர் உயரத்தில் இருக்கும். இது NEOM நகரத் திட்டத்தின் (The Line) ஒரு பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த மலை ஸ்டேடியம் 2034 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் FIFA உலகக் கோப்பைக்காக பரிந்துரைக்கப்பட்ட 15 அரங்குகளில் ஒன்றாகும் என்றும் எந்த அமைப்புகளும் “வானில் ஸ்டேடியம்” அமைக்கப்படுவது குறித்து எந்தத் தகவலையும் வெளியிடவில்லை என்றும் கூறப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!