
கோலாலம்பூர், டிசம்பர் 24 – மலேசிய சமூக நலத் துறையான JKM, “அதிகாரப்பூர்வ மலேசிய மூத்த குடிமக்கள் அட்டை” என்ற பெயரில் எந்த அட்டையையும் வழங்கவில்லை என்று தெரிவித்துள்ளது.
சமீபத்தில் சமூக ஊடகங்களில் இவ்வாறு ஒரு அட்டை இருப்பதாக செய்திகள் பரவி வந்தன. ஆனால் இது பொய்யான தகவல் என்று சமூக நலத் துறை விளக்கம் அளித்துள்ளது,
இந்த மாதிரியான தவறான செய்திகள், குறிப்பாக மூத்த குடிமக்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும் என அத்துறை எச்சரித்துள்ளது.
எனவே, சமூக நலத் துறையின் சேவைகள் அல்லது உதவித் திட்டங்கள் பற்றிய தகவல்களை சமூக நலத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதள வாயிலாக மட்டுமே சரிபார்க்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.



