
கோலாலம்பூர், அக்டோபர்- 27,
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மலேசியா வந்தபோது நடனமாடும் வீடியோ சமூக ஊடகங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதோடு , உலகம் முழுவதும் உள்ள சமூக ஊடக பயனர்கள் பல்வேறு கருத்துக்களையும் பதிவிட்டுள்ளனர்.
இந்த கிளிப் அவரது நெருக்கமான தரப்பினர் மத்தியிலும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. டிரம்பின் சிறப்பு உதவியாளரும் தகவல் தொடர்பு ஆலோசகருமான மார்கோ மார்ட்டின் இந்த வீடியோ கிளிப்பை தனது டுவிட்டரில் பகிர்ந்து கொண்டார்.
அதிபர் டிரம்ப்புடன் 8 ஆண்டுகளில் , இதுவரை எடுக்கப்பட்ட வீடியோவில் இதுவே தனக்கு மிகவும் பிடித்த வீடியோ என அவர் பதிவிட்டுள்ளார். நேற்று KLIA அனைத்துலக விமான நிலையம் வந்தடைந்த டிரம்ப், துடிப்பான பாரம்பரிய உடையில் கலைஞர்களுடன் உற்சாகமாக இணைவதை அந்த வீடியோ காட்சிகள் காட்டுகின்றன. தனது முத்திரையான கைமுட்டிகளை பிசைந்து கொண்டு, கொம்பாங்கின் தாளத்திற்கு ஏற்ப அவர் நடனம் ஆடியது கூட்டத்தினரை மகிழ்வித்தது. இன்று காலை 10 மணிக்கு ஜப்பானுக்கு புறப்படுவதற்கு முன்பு டிரம்ப் கோலாலம்பூரில் இரவைக் கழித்தார்.



