
வாஷிங்டன், ஜன 16 – வியாழக்கிழமை அதிகாலையில், மருத்துவப் பிரச்சினைகள் காரணமாக பணி நிறுத்தப்பட்ட பின்னர், நான்கு அனைத்துலக விண்வெளி நிலைய குழு உறுப்பினர்கள் பாதுகாப்பாக பசிபிக் பெருங்கடலில் தரையிறங்கினர்.
அமெரிக்க விண்வெளி வீரர்கள் மைக் பின்கே ( Mike Finckde ) , ஜெனா கார்டுமேன் ( Zena Cardman ), ரஷ்ய விண்வெளி வீரர் ஒலெக் பிளாட்டோனோவ் ( Oleg Platonov ) மற்றும் ஜப்பானிய விண்வெளி வீரர் கிமியா யுய் (Kimiya Yui ) ஆகியோரே அவர்களாவர்.
அவர்கள் உள்ளூர் நேரப்படி அதிகாலை 12:41 மணிக்கு San Diego கடற்கரைக்கு அருகில் தரையிறங்கினர்.
இது ISS வரலாற்றில் மருத்துவக் காரணமாக முதல் முறையாக அனைத்துலக விணிவெளி நிலைய வீரர்கள் வெளியேறியுள்ளனர்.
இதன்வழி கோள்களின் சுற்றுப்பாதையில் சுகாதார அவசரநிலைகளை நிர்வகிக்கும் நாசாவின் திறனையும் இது நிரூபிக்கிறது.



