
கோலாலம்பூர், ஜூலை 22 – பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் நாளை மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அறிவிப்பு, மலேசியர்களுக்கு நன்றி தெரிவிக்கக்கூடிய வழக்கத்திற்கு மாறாக அனுகூலங்களை கொண்டதாக இருக்கும் என வருணிக்கப்படுகிறது.
தகவல் தொடர்பு அமைச்சரான ஃபாமி ஃபாட்சில் இன்று தனது முகநூல் பதிவில் இதனை உறுதிப்படுத்தினார். புதன்கிழமை காலை 10.30 மணிக்கு அனைத்து மலேசியர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் அறிவிப்பை பிரதமர் வெளியிடுவார், காத்திருங்கள்” என்று ஃபாமி தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை போர்ட் டிக்சனில் நடந்த ஒற்றுமை அரசாங்க கலந்துரையாடலுக்குப் பின் இந்த அறிவிப்பைப் பரிசீலிக்க தனக்கு கூடுதல் நேரம் தேவை என்று நேற்று அன்வார் கூறியிருந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அறிவிப்பு, அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவைச் சமாளிக்க மக்களுக்கு உதவும் அரசாங்கத்தின் முயற்சிகளுடன் தொடர்புடையதாக இருக்கும் என்று இதற்கு முன் பிரதமர் கூறியிருந்தார்.