
வாஷிங்டன், டிசம்பர்-11 – அதிபர் டோனல்ட் ட்ரம்ப் அரசாங்கத்தின் அடுத்த அதிரடியாக, வெளிநாட்டு சுற்றுப் பயணிகளுக்கான நுழைவு விதிகளை அமெரிக்கா கடுமையாக்குகிறது.
புதிய திட்டத்தின் கீழ், 90-நாள் விசா விலக்கு திட்டத்தில் உள்ள 42 நாடுகளின் பயணிகள், கடந்த 5 ஆண்டுகளில் தங்களின் சமூக ஊடக வரலாற்றை (social media history) சமர்ப்பிக்க வேண்டும்.
ESTA விண்ணப்பத்தில் கடப்பிதழ் விவரங்களுடன் சேர்த்து இந்த சமூக ஊடக வரலாறும் கேட்கப்பட உள்ளதாம்.
தவிர, பயணிகள் செல்ஃபி புகைப்படங்களையும் பதிவேற்ற வேண்டியிருக்கும்.
இது, பாதுகாப்பை வலுப்படுத்தும் மற்றும் அச்சுறுத்தல்களை அடையாளம் காணும் முயற்சியே என அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஆனால் விமர்சகர்களோ, இது தனியுரிமையை மீறுவதோடு, இணைய செயல்பாடுகள் தவறாகப் புரிந்துகொள்ளப்படும் சாத்தியத்தையும் உருவாக்கும் என கோடி காட்டியுள்ளனர்.
அதோடு, அமெரிக்கா மீதான சுற்றுப் பயணிகளின் ஆர்வத்தையும் குறைத்து விடும் என எச்சரிக்கின்றனர்.
இந்த பரிந்துரை கூட்டரசு பதிவில் இவ்வாரம் வெளியிடப்பட்ட நிலையில், விரைவிலேயே அதிகாரப்பூர்வமாக அமுலுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



