
நியூ யோர்க், செப்டம்பர்-24 – இரண்டாம் தவணையாக அமெரிக்க அதிபரான பிறகு நேற்று முதன் முறையாக ஐநா பொதுப் பேரவைக்குத் திரும்பிய டோனல்ட் ட்ரம்ப், எதிர்பார்த்தது போலவே அந்த உலக அமைப்பை கடுமையாக விமர்சித்தார்.
உலக அமைதியைக் காக்க அமெரிக்கா முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கத் தவறியிருப்பதோடு, சட்டவிரோத குடியேற்றத்தையும் அது ஊக்குவிப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
இந்த சட்ட விரோத குடியேற்றமானது, மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான தாக்குதல் என்றும் ட்ரம்ப் வருணித்தார்.
தவிர, உலக வெப்பமயமாதல் குறித்த அச்சத்தை “உலகின் மிகப்பெரிய மோசடி” எனக் குறிப்பிட்டு, பருவநிலை மாற்றத்தைக் கையாளும் முயற்சிகளை அவர் ஏளனப்படுத்தினார்.
இவ்வேளையில், வாஷிங்டனின் நெருங்கியப் பங்காளிகள் சுதந்திர பாலஸ்தீன நாட்டை அங்கீகரித்திருக்கும் நடவடிக்கையானது, ஹமாஸ் தரப்புக்கு வழங்கப்பட்ட “சன்மானம்” என சாடியவர், அமைதிக்குத் திரும்பும் ஒரே வழியென்றால்…அது சிறைபிடிக்கப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் என்பதே என்றும் வலியுறுத்தினார்.
இதனிடையே, ஐரோப்பா நாடுகளுடன், சீனா மற்றும் இந்தியாவும் இன்னமும் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை ட்ரம்ப் விமர்சித்தார்.
எனினும், மோஸ்கோவுக்கு எதிராக எந்தக் கடுமையான தடைகள் பற்றி அவர் அறிவிக்கவில்லை.