
அமெரிக்கா, ஜூலை 18 – அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பிற்கு நரம்பு கோளாறு மற்றும் கணுக்கால் வீக்கம் இருப்பது மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்துள்ளது என்று வெள்ளை மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது.
அண்மையில் வலைத்தளத்தில் டிரம்ப் வீங்கிய கணுக்கால்களுடன் இருந்த புகைப்படங்கள் வைரலாகி வந்தது குறிப்பிடத்தக்கது.
இருந்தபோதும் இது ஆபத்து குறைந்த நோய் என்றும் பொதுவாக 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இயல்பாக வரக்கூடிய ஒன்று என்றும் மருத்துவர்கள் விளக்கமளித்துள்ளனர்.
மேலும் டிரம்பின் மருத்துவ இரத்த பரிசோதனை முடிவுகள் அனைத்தும் சாதாரண வரம்புகளுக்குள் இருந்தன என்றும் தற்போது அவர் ஆரோக்கியமாக உள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.