
கோலாலம்பூர், ஜனவரி 15, – முன்னாள் அம்னோ இளைஞர் தலைவர் Khairy Jamaluddin 2023 ஆம் ஆண்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு முதன்முறையாக இன்று அம்னோ பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார்.
அம்னோவின் இளைஞர் பிரிவு தலைவர் Datuk Dr Muhamad Akmal Saleh- இன் அழைப்பை ஏற்று அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்.
வெள்ளை நிற மலாய் உடையில் வருகை புரிந்த Khairy Jamaluddin- ஐ gendang இசை மற்றும் சிலாட் நிகழ்ச்சியால் சிறப்பாக வரவேற்றனர். அவருடன் முன்னாள் தலைவர்கள் மற்றும் பல கட்சியியைச் சார்ந்தவர்களும் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு, அவர் அம்னோவுக்கு மீண்டும் சேரலாம் என்று தகவல்கள் வெளிவந்திருந்த நிலையில் கட்சியின் தலைவர் Dr Muhamad Akmal Saleh-வும் அதற்கு அனுமதி அளித்ததாகவும் கூறப்பட்டது.
இதற்கிடையில், Khairy மீண்டும் கட்சியில் சேருவதை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை.



