
அம்பாங், டிசம்பர் 24 – நேற்று அம்பாங் Jalan Enggang பகுதியில் ஏற்பட்ட மண் சரிவில் மண் தோண்டும் கருவியான excavator முழுமையாக புதைந்த சம்பவம் வலைத்தளத்தில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் கழிவுநீர் பணிகளின் போது ஏற்பட்ட நீர்குழாய் கசிவே இச்சம்பவத்திற்கான முக்கிய காரணம் என தெரியவந்துள்ளது.
அப்பகுதியில் கழிவு நீர் மேலாண்மை நிறுவனமான Indah Water மேற்கொண்ட கழிவுநீர் திட்ட பணிகளுடன் இச்சம்பவம் தொடர்புடையதாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
பாதுகாப்பு காரணங்களுக்காக, Jalan Enggang மற்றும் Jalan AU2, Keramat சாலைகள் முழுமையாக மூடப்பட்டதுடன். விசாரணை மற்றும் பழுதுபார்ப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் நீர்குழாய் பழுதுபார்ப்பு பணிகள் இன்று காலை 6 மணிக்குள் அதாவது திட்டமிட்ட நேரத்துக்கு முன்னதாகவே நிறைவடைந்ததாக அம்பாங் ஜெயா ஊராட்சி மன்ற உறுப்பினர் Abdul Aziz Abd Jalal, கூறினார். அதனைத் தொடர்ந்து, சாலையைச் சரி செய்வதற்கான பணிகளும் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
சாலை முழுமையாக திறக்கப்படும் வரை பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருந்து, உள்ளாட்சி நிர்வாகத்தின் அறிவுறுத்தல்களை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். சம்பந்தப்பட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து தகவல்கள் அவ்வப்போது வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.



