
கோலாலாம்பூர், அக்டோபர்-31 – உலகத் தமிழ் வர்த்தக சங்கம் உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு இணைந்து நடத்தும் 12 குளோபல் வர்த்தக மாநாடு டிசம்பர் 6&7 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.
அமாநாட்டில் இந்திய தமிழக சிறு குறுந்தொழில் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழிலதிபர்கள், முதலீட்டாளர்கள், புதிய கிளைகளை நிறுவுவோர் ஏற்றுமதி இறக்குமதியாளர்கள் ஒன்றிணை உள்ளனர்.
இம்மாநாட்டிற்கு தமிழக அரசின் சிறு குறுந்தொழில் அமைச்சகத்தின் மானியங்கள் பெறும் இவ்வேளையில் இந்திய மற்றும் தமிழக அரசு வேளாண்மை பொருட்களை ஏற்றுமதி செய்யவும், சிறுதானியங்களை உலகெங்கும் பயன்பெறும் வகையில் வேளாண்மை துறை அமைச்சகம், இம்மாநாட்டில் பங்கேற்க உள்ளது.
மேலும் இந்திய ஆஸ்திரேலியா அரசுகளின் தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தின்படி ஆஸ்திரேலியாவில் தொழில் முறை ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு ஆஸ்திரேலியா அரசு மானியங்களை வழங்க உள்ளது.
அம்மானியங்களை பெற பல்வேறு நாடுகளில் இருந்து ஆஸ்திரேலியாவில் தொழில் தொடங்கவும் தொழில் முறை ஆராய்ச்சிகளை செய்யவும் பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு இம்மாநாட்டில் கலந்து கொள்ள ஆர்வம் தெரிவித்துள்ளனர் என உலகத் தமிழ் வர்த்தக சங்கத் தலைவர் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் செல்வகுமார் தெரிவித்தார்.
தொடர்புக்கு+60166167708



