
சிட்னி, டிச 15 – ஆஸ்திரேலியாவில் Bondi கடற்கரையில் ஆடவர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் கையில் துப்பாக்கிச் சூட்டு காயங்களுக்கு உள்ளான சிட்னி பழக்கடை உரிமையாளர் அறுவை சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையில் குணமடைந்து வருவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
43 வயதான அமிட் அல் அமிட் ( Ahmed al Ahmed ) நிறுத்தப்பட்டிருந்த கார்களுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு, துப்பாக்கிக்காரன் மீது பின்னால் இருந்து தாக்குதல் நடத்தி, அவனது துப்பாக்கியை கைப்பற்றி , அவனை தரையில் வீழ்த்தியதாக சமூக வலைத்தலத்தினால் அடையாளம் காணப்பட்டார்.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் Bondy கடற்கரையில் நடந்த யூத கொண்டாட்டத்தில் 50 வயது தந்தையும் அவரது 24 வயது மகனும் நடத்திய இந்த தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர்.
இது கிட்டத்தட்ட 30 ஆண்டுகளில் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட மிக மோசமான துப்பாக்கிச் சூடு தாக்குதல் என்று ஆஸ்திரேலிய போலீசார் தெரிவித்தனர்.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு அமிட்டின் நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக அவரது உறவினரான முஸ்தபா செவன் நியூஸ் ஆஸ்திரேலியா நிறுவனத்திடம் கூறினார்.
அவர் இன்னும் மருத்துவமனையில் இருக்கிறார். உள்ளே என்ன நடக்கிறது என்பது எங்களுக்கு சரியாகத் தெரியவில்லை. ஆனால் அவர் நலமாக இருப்பார் என்று நம்புகிறோம் என அவர் கூறினார்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்காக வெளிநாட்டு மற்றும் உள்நாட்டில் உள்ள தலைவர்களிடமிருந்து அஞ்சலிகள் குவிந்துள்ளன.
இதனிடையே அமிட்டை மிகவும் துணிச்சலான நபர் என அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் வருணித்தார். அவர் பல உயிர்களைக் காப்பாற்றினார். அமிட் உண்மையான ஹீரோ என நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் பிரதமர் கிறிஸ் மின்ஸ்சும் பாராட்டினார்.



