
கோலாலாம்பூர், நவம்பர்-20 – தமிழகத்தில் நடைபெறும் ஆடவருக்கான 2025 உலக இளையோர் கிண்ண ஹாக்கிப் போட்டியில் பங்கேற்கிறார் UNITEN பல்கலைக் கழக மாணவரான S. யஷ்விந்திரா.
UNITEN Thunder ஹாக்கி அணியின் முக்கிய வீரருமான யஷ்விந்திரா தனது சிறப்பான ஆட்டத் தரத்தால், மலேசிய ஜூனியர் ஹாக்கி அணியில் இடம்பிடித்து இவ்வரிய வாய்ப்பைப் பெற்றுள்ளார்.
சென்னை மற்றும் மதுரை மாநகரங்களில் வரும் நவம்பர் 28 தொடங்கி டிசம்பர் 100 வரை இந்த உலகக் கிண்ண ஹாக்கிப் போட்டி நடைபெறுகிறது.
உலகம் முழுவதுமிருந்து 24 நாடுகள் இப்போட்டியில் பங்கேற்கும் நிலையில், அனைத்துலக மேடையிலும் யஷ்விந்திரா அதிரடி படைப்பார் என நம்புவோம்.



