
காசா, ஆகஸ்ட் 11 -காசா நகரில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகிலுள்ள பத்திரிகையாளர்கள் கூடாரத்தை இஸ்ரேல் படைகள் குறிவைத்து நடத்திய தாக்குதலில் ஏழு பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தனர்.
பலியானவர்களில் அல் ஜசீரா ஊடக நிறுவனத்தின் ஐந்து பத்திரிகையாளர்கள் மற்றும் குழுவினரும் உள்ளடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அல் ஜசீரா நிருபர், தனது இறுதிப் பதிவை X தளத்தில் வெளியிட்ட சில நிமிடங்களிலேயே உயிரிழந்தார்.
அந்த பதிவில், காசா நகரில் இடம்பெற்ற இஸ்ரேலிய விமானத் தாக்குதல்களின் காட்சிகள் இடம்பெற்று, “இடைவிடாத குண்டுவீச்சு” குறித்து அவர் விளக்கியிருந்தார்.
முன்னதாக, இஸ்ரேல் படைகள் அல் ஜசீரா பத்திரிகையாளர்களையும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் கொன்றது குறிப்பிடத்தக்கது.