Latestமலேசியா

ஈப்போவில் தனது அத்தையை கொலை செய்து வீட்டில் சடலத்தை வைத்திருந்ததை ஒப்புக்கொண்ட ஆடவன்

ஈப்போ, நவ 11 – தனது அத்தையை கொலைசெய்த பின் அவரது சடலத்தை வீட்டிற்குள் வைத்திருந்ததை ஆடவன் ஒருவன் ஒப்புக்கொண்டுள்ளான்.  ஈப்போ,   பாசீர் பூத்தே , தாமான் புத்திரி லிண்டோங்கான் பிந்தாங்கில்  54 வயது பெண்ணின் சடலத்தை வைத்திருந்தை  21 வயது இளைஞன் ஒப்புக்கொண்டதாக பேரா இடைக்கால போலீஸ் தலைவர்   துணை கமிஷனர்  சுல்கப்லி  ஷரியாட்  ( Zulkafli Sariaat )  தெரிவித்தார்.  

தனது அத்தையுடன் அவ்வீட்டில் தங்கியிருந்ததாகவும்  பொறுமையிழந்து மற்றும் ஆத்திரத்தினால் படியிலிருந்து தரையில் கீழே விழும் அளவுக்கு தாம் அவரை தாக்கியதாக அந்த இளைஞன்  தெரிவித்திருப்பதாக  இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில்  சுல்கப்லி  கூறினார். 

 தனது அத்தை மயக்கம் அடைந்துள்ளார் என்று நினைத்து  வீட்டிலுள்ள  ஒரு அறையில் அவரது உடலை வைத்ததாகவும்    அந்த இளைஞன் கூறியுள்ளான்.  அதே வேளையில்  அவரை தாக்கி மரணம் விளைவித்த  குற்றத்தை அந்த இளைஞன்  ஒப்புக்கொண்டதாக சுல்கப்லி   தெரிவித்தார்.   தகவல் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமையன்று   அந்த வீட்டின்  ஒரு அறையில்  அழுகிய நிலையில்  இறந்து கிடந்த பெண்ணின் சடலத்தை போலீசார்  கண்டுப்பிடித்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!