
ஈப்போ, ஜனவரி-2 – ஈப்போ, அருகே PLUS நெடுஞ்சாலையில் ஏற்பட்ட மோசமான விபத்தில், ஒரு வயதான தம்பதி உயிர் தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈப்போ டோல் சாவடியை தாண்டிய வடக்குத் திசையில், நேற்று காலை சுமார் 8.20 மணியளவில் மற்றொரு வாகனம் மோதியதைத் தொடர்ந்து, அத்தம்பதி பயணித்த கார் தீப்பிடித்து எரிந்தது.
என்ற போதிலும் சுதாகரித்துக் கொண்டு, அறுபதுகளின் இறுதியில் உள்ள அந்த கணவன்-மனைவி இருவரும் காரிலிருந்து வெளியேறி உயிர் தப்பினர்.
அவர்கள் காயங்களுடன் சம்பவ இடத்திலேயே சிகிச்சை பெற்றனர்.
தகவல் கிடைத்து தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்த போதே கார் சுமார் 80 விழுக்காடு தீயில் எரிந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



