
பெட்டாலிங் ஜெயா, டிசம்பர் 3 – KLIA விமான நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக பொய்யான தகவலைப் பரப்பிய ஆடவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
மிரட்டலாக வெளியிடப்பட்ட அத்தகவல் உண்மையிலேயே பொய்யானது என்று பின்னர் உறுதிப்படுத்தப்பட்டது.
நேற்று மாலை, Terminal 1-லிருந்து புறப்படவிருந்த விமானத்தின் பரிசோதனை செயல்முறையின்போது, அந்த மிரட்டல் செய்தி கண்டறியப்பட்டது.
விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக அப்பகுதியில் போலீஸ் மற்றும் வெடிகுண்டு நீக்கும் குழுவுடன் இணைந்து சோதனை மேற்கொண்டபோது அத்தகவல் பொய்யென அறிந்துக்கொண்டனர்.
இந்நிலையில் பொய்யான வெடிகுண்டு மிரட்டல் அல்லது அச்சுறுத்தல்களைப் பரப்புவது கடுமையான குற்றங்களில் ஒன்று என்று விமான நிலைய நிர்வாகம் எச்சரித்துள்ளது.



