
ஷா ஆலாம், செப்டம்பர்-5 – PSV எனப்படும் பொதுச் சேவை வாகனங்களை ஓட்டுவதற்கான உரிமம் இல்லாதது மட்டுமின்றி, காப்புறுதி பாதுகாப்பு மற்றும் சாலை வரி காலாவதியான பேருந்தை ஓட்டிச் சென்றதற்காக, வெளிநாட்டு ஆடவர் ஒருவர் கைதாகியுள்ளார்.
ஷா ஆலாம் அருகே, கூட்டரசு நெடுஞ்சாலையில் வர்த்தக வாகனங்களுக்கு எதிரான JPJ சோதனை நடவடிக்கையில், 30 வயது அந்த இலங்கை ஆடவர் கைதானார்.
தனது முதலாளியின் கட்டளையின் பேரில் கடந்த 6 மாதங்களாக அந்த தொழிற்சாலைப் பேருந்தை தான் ஓட்டி வருவதாக அந்நபர் விசாரணையில் கூறியுள்ளார்.
பல்வேறு போக்குவரத்துக் குற்றங்களுக்காக அப்பேருந்துக்கு மொத்தம் 10 குற்றப்பதிவுகள் வெளியிடப்பட்டன.
போக்குவரத்து நிறுவனமொன்றின் பெயரில் பதிவுச் செய்யப்பட்ட அப்பேருந்து மேல் விசாரணைக்காக சீல் வைக்கப்பட்டது.