உலகில் அதிக செல்வாக்குள்ள 10ஆவது முஸ்லீம் தலைவர் அங்கீகாரத்தை அன்வார் பெற்றார்

கோலாலம்பூர், அக் 30 –
ஜோர்டானின் ராயல் இஸ்லாமிய ஆய்வுகள் மையம் (RISSC) வெளியிட்ட ‘உலகின் 500 மிகவும் செல்வாக்கு மிக்க முஸ்லிம்கள்’ என்ற புத்தகத்தின் 2026 பதிப்பில், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் 10வது செல்வாக்கு மிக்க முஸ்லிம் நபராகப் பெயரிடப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு இதே பிரிவில் 15வது இடத்திலிருந்து அன்வார் உயர்வு பெற்றார்.
அன்வாரின் தலைமைத்துவத்திற்கும் உலகளவில் மலேசியாவின் நிலைக்கும் அனைத்துலக அங்கீகாரத்தை இது பிரதிபலிக்கிறது. உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க 50 முஸ்லிம் நபர்களில் அன்வாரும் பட்டியலிடப்பட்டுள்ளார். பட்டியலில் முதல் இடத்தில் கத்தார் எமிர் Sheikh Tamim bin Hamid Al – Thani இருந்கிறார்.
சவுதி அரேபியாவின் மன்னர், மன்னர் சல்மான் பின் அப்துல்-அஜீஸ் அல்-சவுத் 8 ஆவது இடத்திலும் மற்றும் இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ ( Prabowo Subianto ) 15வது இடத்திலும் உள்ளனர்.
இஸ்லாமிய தலைவர் மற்றும் உலகில் செல்வாக்குள்ள அரசியல்வாதி என்ற நிலையில் அன்வார் ஏழாவது இடத்தில் இருக்கிறார். கடந்த ஆண்டு இந்த பட்டியலில் 9 ஆவது இடத்தில் இருந்த அன்வார் ,இஸ்லாமிய உலகில் அல்லது முஸ்லிம்களிடையே குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கொண்டுவரும் திறன்,தற்போது 10 ஆவது இடத்தில் உள்ள Prabowo, 13 இடத்தில் உள்ள எகிப்து அதிபர் Abdel Fattah Saed Al – Sisi ஆகியோரை பின்தள்ளி இவ்வாண்டு அன்வார் 7ஆவது இடத்திற்கு உயர்ந்தார்.
தாய்லாந்து மற்றும் கம்போடியாவிற்கும் இடையிலான பதட்டங்களைத் தணிப்பதில் தென்கிழக்கு ஆசியாவில் ஒரு ஆக்கபூர்வமான அமைதி தரகர் என்ற மலேசியாவின் பிம்பத்தை வலுப்படுத்திய அன்வார் ஆக்கிரமிப்புக்கு எதிரான பாலஸ்தீன உரிமைகளுக்கு தீவிர ஆதரவாளராகவும் இருந்து வருகிறார்.



