
ஆயர் குரோ, டிசம்பர்-11 – மலாக்காவில் எண்ணெய் நிலையமொன்றின் கழிவறையில் பெண்ணொருவர் சிறுநீர் கழிப்பதை எட்டிப் பார்த்த குற்றத்திற்காக, 39 வயது ஆடவருக்கு 4,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஆயர் குரோ மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் L. ரமேஷ் அக்குற்றத்தை ஒப்புக் கொண்டதை அடுத்து, நீதிபதி அத்தீர்ப்பை வழங்கினார்.
டிசம்பர் 8-ஆம் தேதி காலை 7.30 மணியளவில் பெண்கள் கழிவறையினுள் அத்துமீறி, 28 வயது அப்பெண்ணை மறைந்திருந்து நோட்டம் விட்டதாக அவ்வாடவர் குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.
5 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டது.
தனக்கு slip disc எனப்படும் முதுகெலும்பு பாதிப்பு இருப்பதாகவும், எனவே மருத்துவமனையில் சிகிச்சையெடுக்க வேண்டுமென்றும் கூறி ரமேஷ், குறைந்தபட்ச தண்டனைக்கு முறையிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் செவிமெடுத்த நீதிபதி, கடைசியில் 4,000 ரிங்கிட் அபராதம் அல்லது 6 மாத சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.



