Latestமலேசியா

“ஒரு கனவை ஆதரியுங்கள், எதிர்காலத்தைத் தூண்டுங்கள்”; Hearts for MyKITAவின் நிதி திரட்டும் நிகழ்வு

பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட்-11- இளைஞர்களின் கரங்களை வலுப்படுத்தி B40 குடும்பங்களை மேம்படுத்தும் பணிகளை ஆர்ப்பாட்டமில்லாமல் செய்வது வருவது தான் MyKITA அமைப்பு.

வசதியற்ற மாணவர்கள், வாழ்க்கைச் சவால்களை சமாளிக்கவும், அவர்களின் முழு திறனை அடையவும் உதவும் வகையில், தங்கும் விடுதி ஆதரவையும் தனிப்பட்ட மேம்பாட்டுத் திட்டங்களையும் அவ்வமைப்பு வழங்குகிறது.

அவ்வகையில், “Hearts for MyKITA” என்ற பெயரில் நிதித் திரட்டும் நிகழ்வொன்று நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது.

பெட்டாலிங் ஜெயா, Paradigm Mall பேரங்காடியில் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற்ற நிகழ்வை, MyKITA, JA Malaysia, SICC எனப்படும் Sustainable Initiative For Community Change ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்தன.

செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ், கிள்ளான் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சாந்தியா இருவரும் சிறப்பு வருகை புரிந்தனர்.

இந்த நிதி திரட்டும் நிகழ்வில் 35 MyKita விடுதி மாணவர்கள் பங்கேற்றனர். கப்கேக்குகள், பிஸ்கட்டுகள், முறுக்கு, கச்சான் பூத்தே, தேநீர் மற்றும் காப்பி போன்றவற்றை அவர்கள் விற்பனை செய்தனர்.

அதோடு, காய்கறி செடிகள், மலர் செடிகள், கரிம உரங்கள், உரம், மலர் தொட்டிகள் மற்றும் கலப்பு மண் ஆகியவற்றை வாடிக்கையாளர்களுக்கு விற்று விளம்பரப்படுத்தினர்.

தவிர, குழந்தைகளுக்கான விளையாட்டு கூடாரங்களும் திறக்கப்பட்டிருந்தன; மருதாணி கலையும் கற்றுக் கொடுக்கப்பட்டது.

Metal and Chemical Technology Sdn Bhd நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி மகேந்திரன் பெருமாள் 9 மடிக்கணினிகளையும் 1 Sony 65 அங்குல தொலைக்காட்சி பெட்டியையும் MyKITA-வுக்கு அன்பளிப்பாக வழங்கினார்.

சட்டமன்ற உறுப்பினர் குணராஜ், MyKITA-வுக்கு 5,000 ரிங்கிட்டை நன்கொடையாக வழங்கினார். மாணவர்களுக்கு இது ஊக்கத்தை அளிக்கும் என்றார் அவர்.

இளைஞர்களுக்கு இது போன்ற ஏராளமான திட்டங்கள் நடத்தப்பட வேண்டியது அவசியமென சார்ல்ஸ் சாந்தியகோ கூறினார்.

இந்நிகழ்வு மாணவர்களின் வியாபார திறனை மேம்படுத்த உதவுமென, இணை ஏற்பாட்டாளர்களும் பெற்றோர்களும் வணக்கம் மலேசியாவுடன் கூறினர்.மாணவர்களின் கோலாட்ட மற்றும் சிலம்பாட்ட படைப்புகளும் வந்திருந்தோரை கவர்ந்தன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!