
வாஷிங்டன், செப்டம்பர்-11 – ஓரக்கல் (Oracle) நிறுவனத்தின் இணை நிறுவனர் லேரி எலிசன் (Larry Ellison), 393 பில்லியன் டாலர் மதிப்புடன் தெஸ்லாவின் இலோன் மாஸ்க்கை முந்தி உலக மகா பணக்காரர் ஆகியுள்ளார்.
இதன் மூலம் ஓரே ஆண்டில், உலகின் மிகப் பெரும் பணக்காரர் என்ற பட்டத்தை மாஸ்க் இழந்துள்ளார்.
384 பில்லியன் டாலருடன் அவர் இரண்டாம் இடத்திற்குப் பின்தள்ளப்பட்டுள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த கணினி தொழில்நுட்பப் பன்னாட்டு நிறுவனத்தின் மூலம் கோடீஸ்வரராக உள்ளவர் லேரி எலிசன்.
ஓரக்கல் நிறுவனத்தில் 41 விழுக்காடு பங்குகளை அவர் தன்வசம் வைத்துள்ளார்.
இந்நிலையில் பங்குச் சந்தையில் ஓரக்கலின் மதிப்புகள் அதிகரித்ததால், அவரின் சொத்து மதிப்பு ஒரே நாளில் சுமார் 101 பில்லியன் டாலர் எகிறியுள்ளதாக, Bloomberg கூறுகிறது.
எலிசன், மாஸ்க் ஆகியோருக்கு அடுத்து உலக பணக்காரர்கள் பட்டியலில் மெட்டா நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் (Mark Zuckerberg), அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸோஸ் (Jeff Bezos) ஆகியோர் உள்ளனர்.