
புத்ரஜெயா, ஆகஸ்ட் 6 – ஓய்வு பெறும் வயதை 65 ஆக உயர்த்துவதற்கான திட்டம் குறித்து பொது சேவைத் துறை (JPA) ஆய்வொன்றை மேற்கொள்ளவுள்ளது.
இம்முடிவு எடுக்கப்படுவதற்கு முன்பு ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டுமென்று அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் டான் ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர் கூறியுள்ளது.
முன்னதாக, 13வது மலேசியா திட்டத்தின்படி, 60 வயது என்று நிர்ணயிக்கப்பட்ட ஓய்வூதிய வயதை அரசாங்கம் மறுபரிசீலனை செய்யவுள்ளது.
தொழிலாளர் சட்டங்கள், மக்கள்தொகை மற்றும் EPF போன்ற அமைப்புகளின் அடிப்படையில் ஆய்வுகள் நடத்தப்படுவது மிக அவசியமாக கருதப்படுகின்றது.
நாட்டில் அதிகரித்து வரும் மூத்த குடிமக்களின் எண்ணிக்கையும், அனைத்து தரப்பினரின் நலன்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு, இந்த திட்டத்தை முழுமையாக ஆய்வு செய்யவுள்ளனர்.