
பேங்காக், டிச 8- கம்போடிய எல்லையில் புதிய மோதகளால் தாய்லாந்து ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டதோடு மேலும் பலர் காயம் அடைந்தனர் என அந்நாட்டின் ராணுவம் தெரிவித்துள்ளது. தங்களது எல்லைப் பகுதியில் ஏற்பட்ட இந்த மோதல் குறித்து அவ்விரு
நாடுகளும் ஒன்றை ஒன்று குறைகூறிக் கொண்டன. கம்போடிய இராணுவத்திற்கு எதிராக தாய்லாந்து வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக AFP செய்தி வெளியிட்டுள்ளது.
ஜூலை மாதம் எல்லைப் பிரச்சினை ஐந்து நாள் போராக வெடித்தது, அதற்கு முன்பு அக்டோபர் மாதம் மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் போர் நிறுத்த உடன்பாட்டில் கையெழுத்திட்டனர். ஜூலை மாதம் நடந்த மோதல்களின் போது சுமார் 48 பேர் கொல்லப்பட்டதோடு , 300,000 க்கும் மேற்பட்டோர் தற்காலிகமாக இடம்பெயர்ந்தனர். இரு தரப்பினரும் ராக்கெட்டுகள் மற்றும் கனரக பீரங்கித் தாக்குதல்களை நடத்தினர்.



