Latestமலேசியா

கூடைப்பந்து போட்டியில் நடுவரை தாக்கிய பயிற்சியாளர் இடைநீக்கம்

கோலாலம்பூர், அக்டோபர்-26,

மலேசியக் கூடைப்பந்து அணியான Parkcity Heat-டின் தலைமைப் பயிற்சியாளர் கோ செங் ஹுவாட் (Goh Cheng Huat) போட்டியின் போது நடுவரை தாக்கியதால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

MBL எனப்படும் மலேசியக் கூடைப்பந்து லீக்கின் ஏற்பாட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மேம்பாட்டு லீக் ஆட்டத்தின் போது இச்சம்பவம் நிகழ்ந்தது.

Maba அரங்கில் Parkcity Heat அணியும் Southern Tigers அணியும் சந்தித்தாடிய ஆட்டத்தின் நான்காம் சுற்றின் கடைசியில் அவர், நடுவர் மேண்டி நியெங் (Mandy Ngieng) முகத்தில் ஆட்ட யுக்தியை வரையும் tactical clipboard அட்டையால் அடித்தார்.

இந்த அதிர்ச்சி சம்பவம் வீடியோவில் பதிவாகியுள்ளது.

அது சமூக வலைத்தளங்களில் வைரலானதையடுத்து, மலேசிய கூடைப்பந்து சங்கமான MABA விசாரணையைத் தொடங்கி, செங் ஹுவாட்டை இடைநீக்கம் செய்துள்ளது.

நடுவர் நியெங் சிறிய காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

போட்டி நடுவர்களையோ அதிகாரிகளையோ தாக்கும் எந்த விதமான நடத்தையும் விளையாட்டின் மதிப்பை குலைக்கும் என்றும், அதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் Maba எச்சரித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!