Latestமலேசியா

கெடா Napoh சாலை விபத்தில் பெண் பலி; சிவப்பு விளக்கை மீறிய வேன் ஓட்டுநர்தான் முக்கிய காரணி

ஜித்ரா, ஜனவரி 16 – நேற்று இரவு கெடா Napoh பகுதியில் நிகழ்ந்த விபத்தில், 22 வயதுடைய பெண் ஒருவர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தாய்லாந்தைச் சேர்ந்த டொயோட்டா வாகனமோட்டி சிவப்பு விளக்கிற்கு நிற்காமல் அதனை மீறி சென்றதுதான் இவ்விபத்திற்கான முக்கிய காரணமென குபாங் பாசு மாவட்ட போலீஸ் தலைவர் Superintendan Mohd Radzi Abd Rahim கூறியுள்ளார்.

அந்த வேன் ஓட்டுநர் பேராக் Pantai Remis-இலிருந்து தாய்லாந்தின் Satun நோக்கி சென்று கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சம்பந்தப்பட்ட வேன் ஓட்டுனர் எவ்வித காயங்களுமின்றி உயிர் தப்பினார்.

இந்நிலையில் போலீசார் மேற்கொண்ட பரிசோதனையில் அந்த ஆடவர் போதைப் பொருட்கள் எதுவும் எடுத்துக்கொள்ளவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் இந்த விபத்து சாலை போக்குவரத்து சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்தச் சம்பவத்தை தொடர்ந்து போலீசார் சாலை விதிகளை எப்போதும் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என்று பொதுமக்களுக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!