
பாசீர் கூடாங், ஜூலை-21- ஜோகூர், பாசீர் கூடாங்கில் கொள்ளை முயற்சியின் போது துப்பாக்கிச் சூடு கிளப்பப்பட்ட சம்பவத்தை, ஸ்ரீ ஆலாம் போலீஸ் விசாரித்து வருகிறது.
சனிக்கிழமை இரவு 7 மணிக்கு மேல் Taman Megah Ria-வில் அச்சம்பவம் நிகழ்ந்ததை மாவட்ட போலீஸ் உறுதிப்படுத்தியது.
மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேக நபர் கடைக்குள் புகுந்து கைத்துப்பாக்கி முனையில் பணியாளரை பணம் கேட்டு மிரட்டினான்.
பின்னர் வெளியேறும் போது ஒரு தடவை துப்பாக்கிச் சூட்டைக் கிளப்பி விட்டு மோட்டார் சைக்கிளில் அவன் தப்பிச் சென்றான்.
பாதிக்கப்பட்ட கடைப் பணியாளருக்குக் காயமேதும் ஏற்படவில்லை.
சந்தேக நபர் கைத் துப்பாக்கியுடன் கடையிலிருந்து தப்பிச் செல்லும் வீடியோ சமூக ஊடகங்களில் முன்னதாக வைரலானது.