
கோத்தா திங்கி, அக்டோபர்-3 – ஜோகூர், கோத்தா திங்கியில் உள்ள சுற்றுலா தகவல் மையம் TIC-யின் வரலாற்று கேலரியில் வைக்கப்பட்டிருந்த இரண்டு ஓவியங்கள் காணாமல் போயிருக்கின்றன.
அவை திருடப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
58 வயதான ஒரு உள்ளூர் வியாபாரி நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு புகார் அளித்துள்ளார்.
காணாமல் போன ஓவியங்களில் ஒன்று கோத்தா திங்கி நீர்வீழ்ச்சி காட்சியையும், மற்றொன்று மலர் ஓவியத்தையும் கொண்டது.
சுமார் 42-க்கு 60 என்ற சென்டி மீட்டர் அளவுடைய இந்த ஓவியங்களின் மதிப்பு ஆயிரம் ரிங்கிட் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் இடத்தில் CCTV கேமரா வசதி இல்லாததால் விசாரணை சிக்கலாகியுள்ளதாக, கோத்தா திங்கி மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவு கூறியது.
எனவே, பொது மக்கள் யாராவது தகவல்கள் வைத்திருந்தால், கோத்தா திங்கி போலீஸ் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம்.