
கோலாலம்பூர், ஜூலை 22- DBKL எனப்படும் கோலாலம்பூர் மாநகர் மன்றம், போலீஸ் மற்றும் தேசிய போதைப் பொருள் எதிர்ப்பு நிறுவனம் ஆகியவவை வார இறுதியில் பொழுதுபோக்கு விடுதிகள், மற்றும் snooker மையங்களில் அதிரடி சோதனையை நடத்தின.
சனிக்கிழமை இரவு 9 மணியளவில் தொடங்கிய இந்த சோதனை நடவடிக்கை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணியளவில் நடைபெற்றது.
கோலாலம்பூரில் Jalan Ipoh, Chow Kit, Jalan Tun Razak ஆகிய இடங்களில் முறையான லைசென்ஸ் இன்றி மற்றும் லைசென்ஸ் விதிமுறைகளை மீறியுள்ள சந்தேகத்திற்குரிய பொழுதுபோக்கு மையங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இரண்டு பொழுதுபோக்கு மையங்கள் உடனடியாக மூடும்படி உத்தரவிடப்பட்டதோடு இதர நான்கு பொழுதுபோக்கு மையங்களிலிருந்து பல்வேறு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
லைசென்ஸ் அனுமதியின்றி செயல்பட்டது, வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு வைத்திருந்தது, அனுமதிக்கப்பட்ட நேரத்தையும் மீறி பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை நடத்தியது போன்ற குற்றங்கள் தொடர்பில் ஏழு குற்றப்பதிவுகளும் விநியோகிக்கப்பட்டதாக கோலாலம்பூர் மாநகர் மன்றம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.