
கோவா, டிசம்பர் 8 – இந்தியா கோவாவில் அமைந்திருக்கும் பிரபல Night Club ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டு 25 பேர் உயிரிழந்தனர்.
இதில் டெல்லியிலிருந்து வருகைபுரிந்த 4 குடும்ப உறுப்பினர்கள் உட்பட 21 ஊழியர்களும் பாலியாகினர்.
முதலில் சிலிண்டர் வெடித்ததானால் அச்சம்பவம் ஏற்பட்டதென்று கருதப்பட்ட நிலையில், தற்போது Indoor fireworks காரணமாக அத்தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று போலீசார் விசாரணையின் அடிப்படையில் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அந்த இரவு விடுதி மேலாளர் உட்பட மேலும் மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆறு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அச்சம்பவத்தில் தொடர்புடைய அனைவருக்கும் தக்க தண்டனை வழங்கப்படுமென்றும் கோவா முதல்வர் குறிப்பிட்டிருந்தார்.



